இந்தியாவில் அmதிகரித்து வரும் தினசரி கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்பட்டுத்தி வரும் மத்திய அரசு தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். திங்கட்கிழமை ஒரே நாளில் 43 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதால் உலகிலேயே தினசரி அதிகளவு தடுப்பூசி போடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்தது. இந்தியாவில் நாள்தோறும் சராசரியாக 26 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் நாள்தோறும் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்தியாவில் இரண்டு டோஸ்கள் போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை சுமார் ஒரு கோடி அளவில் உள்ளது. இதனிடையே, கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் இந்தியாவில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையும் உயரத் தொடங்கியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.