உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சத்து 37 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கையில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 3 வது இடத்தை பிடித்தது.
கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அங்கு 29 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 32 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. 16 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பிரேசிலில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3 வது இடத்தில் ரஷ்யா இருந்துவந்த நிலையில், அந்நாட்டை பின்னுக்கு தள்ளி இந்தியா 3ம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 73 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் அதிக பட்சமாக மகாராஷ்டிர மாநிலம் பெருத்த பாதிப்பை சந்தித்துள்ளது. அம்மாநிலத்தில் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது.