சபரிமலையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு; புதிய கட்டுப்பாடுகள் விதித்த கேரள அரசு!

சபரிமலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சபரிமலையில், பக்தர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோருக்கு, கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 26ஆம் தேதி முதல் கோயிலுக்கு வரும் பக்தர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் ஏற்கனவே பரிசோதனை செய்திருந்தாலும் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், நிலக்கல் அடிவார முகாமுக்கு வருவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக பரிசோதனை மேற்கொண்டு, கொரோனா இல்லை என சான்றிதழுடன் வரவேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருமல், காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Exit mobile version