மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 168 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 168 கன அடியாக அதிகரித்தது. காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 114 புள்ளி 33 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 84 புள்ளி 71 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 10 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Exit mobile version