காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, 7 ஆயிரத்து 200 கன அடியிலிருந்து 8 ஆயிரத்து 200 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக-காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவானது 7 ஆயிரத்து 200 கன அடியிலிருந்து 8 ஆயிரத்து 200 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் வெளியேற்றத்தை விட, வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு, ஒரு அடி வீதம் உயர்ந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் 40.15 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது நான்கு அடி உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 14.36 டி.எம்.சி யாகவும், அணையின் நீர் மட்டம் 44 புள்ளி 22 அடியாகவும் உள்ளது. மேலும் சுற்று வட்டாரப்பகுதி குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.