வறண்டு போன மேட்டூர் டேம்! கை கொடுக்குமா காவிரி! விடியா ஆட்சி..இதுவே சாட்சி!

மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 42 நாட்களில் வெயில் மற்றும் பிற காலநிலைகள் காரணமாக 34 அடி குறைத்து விட்டதால் குட்டைபோல் காட்சியளிக்கிறது. இதனால் காவிரி நீரினை நம்பியிருக்கும் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். பாசனத்திற்கு சரியாக தண்ணீர் கிடைக்காமல் பெருத்த சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

குட்டையாக மாறிப்போன மேட்டூர் அணை..!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். இதன்மூலம் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாத நிலையிலும் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் குறிப்பிட்ட தேதியான ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசந்த்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்போது அணை நீர்மட்டம் 103 அடியாக இருந்துள்ளது. ஆனல் இந்த தீடீர் மாற்றத்திற்கு என்னதான் காரணம்?

அன்றைக்கு பத்தாயிரம் கன அடி தண்ணீர் வீதம் திறந்துவிடப்பட்டது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 200 கன அடி குறைந்துள்ள நிலையில் அணையில் இருந்து கூடுதல் நீர் திறந்துவிட்டதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து கொண்டு வருகிறது. இதற்கு இந்த விடியா திமுக அரசு பொறுப்பேற்று விரைவில் நடவடிக்கை எடுக்குமா? கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்துக்கு முன்னதாகவே தொடங்கி அதி தீவிரமடைந்தது. ஆனால் இந்தாண்டு அப்படியில்லை. எனவே இதுவும் ஒரு சூழலியல் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு பருவமழைதான் காரணமா?

தென்மேற்குப் பருவமழை இப்போதுதான் ஓரளவு பெய்யத் தொடங்கியிருக்கிறது. மேலும் காவிரி ஆற்றில் இருந்து கூடுதல் நீரை திறந்துவிடும்படி டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர். அதனை இந்த விடியா திமுக அரசு கண்டுகொள்வதுபோலத் தெரியவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகளும் மக்களும் வலியுறுத்தியதற்கு இணங்க, நாளை கர்நாடகாவிலிருந்து, குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாஜர் அணையிலிருந்த்பு வினாடிக்கு 4987 அடி தண்ணீரானது காவிரியில் திறக்கப்பட்டு உள்ளது.

புதன் கிழமை மேட்டூர் அடையும் காவிரி!

நாளை இந்த  நீரானது கர்நாடகா தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அடையும். மேட்டூருக்கு வரும் புதன்கிழமை வந்தடையும் என்று சொல்லப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி விநாடிக்கு பத்தாயிரம் கன அடி நீரானது திறந்துவிடப்பட்டு வருகிறது. ஆனால் கர்நாடாகாவில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரானது மேட்டூர் அணைக்கு வந்தடைந்தால் விநாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் வரும். அதாவது தண்ணீர் திறப்பை விட அணைக்குத் தேவையான நீர்மட்டம் அதிக அளவு இருப்பதால், மேட்டூர் நீர்மட்டமானது தொடர்ந்து குறைந்துகொண்டே இருக்கும் நிலை ஏற்படும்.

Exit mobile version