மேகதாது அணை விவகாரத்தில் விடியா அரசு மெளனம் சாதிக்கிறது – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்ச்சாட்டு!

அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்த்து விரைவில் எங்கள் இலக்கை அடைவோம் என்று கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூரில் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாசறை அமைப்பு, மகளிர் குழு மற்றும் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, அதிமுகவில் இதுவரை ஒரு கோடியே 35 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், வரும் நாட்களில் 2 கோடி உறுப்பினர்களை சேர்த்து எங்கள் இலக்கை அடைவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

காவிரி விவகாரத்தில் விடியா அரசு மௌனம் சாதிப்பதாக குற்றம்சாட்டிய கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, எதிர்க்கட்சியாக இருந்தபோது, கெட்டதை கூட தைரியமாக செய்தோம் என ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது, அதிமுக ஆட்சியில் அவர் எவ்வளவு கெட்ட நோக்கத்தோடு செயல்பட்டார் என்பதை எடுத்துக் காட்டுகிறது என்றார்.கைதி எண் கொடுக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியை, ஸ்டாலின் தார்மீக பொறுப்பேற்று அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தினார்.

 

Exit mobile version