ஓசூரில் உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்துஅதிகரித்துள்ளதால், தென்பெண்ணையில் ஆற்றில் வினாடிக்கு 408 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த 2ம் தேதி முதல் வினாடிக்கு 328 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 240 கனஅடியும், வலது மற்றும் இடது கால்வாய்களில் 88 கனஅடி நீரும் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டது. இந்தநிலையில், நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து 408 கனஅடியாக உயர்ந்தது.

கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியில், 41.66 அடிக்கு நீர் இருப்பு அதிகரித்துள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் இருந்து வினாடிக்கு 320 கனஅடியும், வலது மற்றும் இடது கால்வாயில் 88 கனஅடியும் என மொத்தம், 408 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை தொடரும் பட்சத்தில், அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version