கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

நந்திமலை மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒருவாரமாக பெய்து வரும் கனமழையால் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. 568 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று ஆயிரத்து 48 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆற்றில் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version