பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஓராண்டுக்கு பின்னர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 97 அடியை எட்டியுள்ளது.
105 அடி உயரமும், 32.8 டி.எம்.சி கொண்டுள்ள பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 3 நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து 5 ஆயிரத்து 699 கன அடியாக அதிகரித்துள்ளது. எனவே ஓராண்டுக்கு பின் மீண்டும் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 96 புள்ளி 98 அடியாகவும், நீர் இருப்பு 26.4 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையிலிருந்து பாசனத்துக்காக ஆயிரத்து 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.