முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட ஏரியில், நீரின் அளவு அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் ஆகியவை புனரமைக்கப்பட்டு, பணிகள் நிறைவடைந்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாவலூரில் உள்ள ஏரியை, குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரி, 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புணரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இத்திட்டத்தின் மூலம், நாவலூர், வெங்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள 6 கிராமங்களுக்கும், 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களுக்கும், மூன்று போகத்திற்கு நெல் பயிரிட போதுமான நீர் கிடைத்துள்ளது.மேலும், குடிமராமத்து திட்டம் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளதால், இத்திட்டத்தை கொண்டு வந்த தமிழக அரசுக்கு, விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.