திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. விடிய, விடிய பெய்த மழையால், பாபநாசம், மணிமுத்தாறு சேர்வலாறு, கடனாநதி, குண்டாறு, அடவிநயினார் போன்ற அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து எதிர்பார்த்ததை விட அதிகரித்து காணப்படுகிறது. மேலும் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வந்தாலும் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.