கன மழையால் திற்பரப்பு அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்ட திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அளவுக்கு அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள கோதையாறு, பரலியாறு, தாமிரபரணி ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்நிலையில் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து ஆர்ப்பரித்து கொட்டுவதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை பேரூராட்சி நிர்வாகம் விதித்துள்ளது.

Exit mobile version