பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவியில். 3 மாதங்களுக்குப் பிறகு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், இன்று முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவியில், கடந்த 3 மாதங்களாக சரிவர மழை பெய்யாததால், தண்ணீர் வரத்தில்லாமல் அருவி மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், வால்பாறை மற்றும் வனப்பகுதியில் பெய்த மழையால், குரங்கு அருவிக்கு தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. இதையடுத்து, அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், குரங்கு அருவியில் இன்ற முதல் சுற்றுலாபயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த அருவியில் குளிப்பதற்கு, சுற்றுலா பயணிகளிடம் வனத்துறை சார்பில், ஒரு நபருக்கு 30 ரூபாய் நூழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பயணிகள் பாதுகாப்பாக குளிக்க, அருவியில் வனத்துறை சார்பில் இரும்பு கம்பிகள் 5 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.