பெண்களிடம் அதிகரிக்கும் புகைப்பழக்கம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

உலகளவில் ஆண்களைவிட அதிக அளவு பெண்கள் புகை பழக்கத்திற்கு அடிமையாக உள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

வேகமாக செயல்படும் உலகத்தின் செயல்பாடுகள் மனிதர்கள் ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் வகையில் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். இத்தகைய பழக்கங்களில் இருந்து விடுபட மத்திய,மாநில அரசுகள் பல்வேறு அமைப்புகள் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.

நிலையில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவு புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. இதன் புள்ளிவிவரங்கள் முதன்முறையாக வெளிவந்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அந்தோனோம்  கூறும்போது, இதுவரை பல தலைமுறைகளாக ஆண்கள் மட்டுமே புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி வந்ததை கண்டோம். இதனைத்தொடர்ந்து உலகளவில் நடைபெற்ற சர்வே முடிவில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவு இப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை புகைப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கத்திற்கு ஆண்களுக்கு நிகராக பெண்கள் இருப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும் புகைபிடித்தல் மற்றும் புகையிலைப் பொருட்களால் புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் 1.8 பில்லியன் மக்கள் இறக்கின்றனர். இதனை தடுத்து நிறுத்த  முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version