குடியரசு தின விழாவையொட்டி, தமிழக முழுவதும் காவல்துறையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழக காவல்துறை மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. மத்திய உளவுத்துறை, நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அறிவுறுத்தியதன் விளைவாக, காவல்துறை பாதுகாப்பை அதிகரித்துள்ளது. குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ரயில் நிலையங்களில், காவல்துறை கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்துப் பயணிகளும், அவரது உடமைகளும், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். சென்னை முழுவதும் காவல்துறையின் கண்காணிப்பும், ரோந்தும், குடியரசுத்தினத்தை முன்னிட்டு கடந்த சில நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சுமார் 15 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.