புதுக்கோட்டையில் மூங்கில் கூடைகளின் விற்பனை அதிகரிப்பு

புதுக்கோட்டையில் பிளாஸ்டிக் தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மூங்கில் கூடைகளின் விற்பனை அதிகரித்துள்ளது..

நாம் காலம் காலமாக பயன் படுத்தி வந்த மூங்கில், பிரம்பு, பனை மட்டை, ஈச்சமட்டை ஆகியவற்றால் செய்யப்பட்ட கூடைகள் இயற்கைக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாதவை. ஆனால் இடைக்காலத்தில் வந்த பிளாஸ்டிக் பொருட்களோ மனிதர்களுக்கும், இயற்கைக்கும் கேடுவிளைவிப்பவை.

இதனால் ஏற்படும் சுற்றுசுழல் மாசுபட்டை கட்டுப்படுத்தவே தமிழக அரசு தற்போது பிளாஸ்டிக்கால் செய்யப்படும் பைகளுக்கு தடைவிதித்துள்ளது.இதனால் புதுக்கோட்டை பகுதிகளில் பாரம்பரிய முறையில் செய்யப்படும் கூடைகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.

பிளாஸ்டிக் பைகளுக்கும் முறங்கள் போன்றவற்றிற்கு பதிலாக பனைமட்டை, ஈச்சமட்டையில் தயாரிக்கப்படும் பைகள், மூங்கிலால் செய்யப்படும் கூடைகள், முறம், பிளாஸ்டிக் பாய்களுக்கு பதிலாக கோரை மற்றும் ஈச்சம் பாய், பிளாஸ்டிக் விசிரிகளுக்கு பதி பனைமட்டை விசிரி போன்றவற்றை பொதுமக்கள் மீண்டும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

புதுக்கோட்டை பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றத்தால், இந்த வகை கைத்தொழில்களில் ஈடுபட்டுவரும் ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வில், மீண்டும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Exit mobile version