மானியமில்லாத சமையல் எரிவாயு விலையை 16 ரூபாய் உயர்த்தி உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் மானியத்துடன் கூடிய ஆண்டிற்கு 12 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. 12 சிலிண்டர்களுக்கு அதிகமாக வாங்குவோருக்கு மானியம் இன்று சந்தை விலையில் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் எண்ணெய் நிறுவனங்கள் மானியமில்லாத எல்பிஜி சமையல் எரிவாயு விலையை 16 ரூபாய் உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை 590 ரூபாய் 50 காசில் இருந்து 606 ரூபாய் 50 காசாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் மண்ணெண்ணெயின் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை தொடர்ந்து 26வது வாரமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.