மன்னார் வளைகுடா பகுதியில் பவளப்பாறைகளில் வளர்ச்சி அதிகரிப்பு!!

மன்னார் வளைகுடா பகுதியில் கடல்வாழ் உயிரினங்களின் பிறப்பிடமாக கருதப்படும் பவளப்பாறைகளில் வளர்ச்சி அதிகரித்துள்ளதாக கடல் வள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடல் ஆமைகள், கடல் குதிரைகள் போன்ற அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் உள்ள ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரையிலான 21 தீவுகளில், பவளப்பாறைகள் அதிகம் காணப்படுகின்றன. மீன்கள் தங்கள் இனப்பெருக்க காலத்தில் இந்த பவளப்பாறைகளில் தங்கி இனப்பெருக்கம் செய்யும் என கூறப்படுகிறது. கடந்த 2010, 2016ஆம் ஆண்டுகளில் பருவநிலை மாற்றம் காரணமாக அதிக அளவிலான பவளப்பாறைகள் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட பருவ நிலை மாற்றத்தால், பவளப்பாறைகள் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளதாகவும், பவளப்பாறைகளை தமிழக வனத்துறையும், சுற்றுச்சூழல் துறையும் அழியாமல் பாதுகாத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Exit mobile version