இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்து 916 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்து 83 ஆயிரத்து 407 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 5 லட்சத்து 15 ஆயிரத்து 386 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 22 ஆயிரத்து 123 பேர் உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில், பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 461 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 82 ஆயிரத்து 324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில், ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து 140 பேருக்கும், குஜராத்தில் 40 ஆயிரத்து 69 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 33 ஆயிரத்து 700 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேற்கு வங்கத்தில் 27 ஆயிரத்து 109 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல், தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது.

 

Exit mobile version