பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது

குழந்தைகளின் பாலினத்தை கண்டறியும் முறையை கட்டுப்படுத்தியதன் மூலம் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்திருப்பதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட புங்கத்தூரில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், பெண் குழந்தைகளுடன் கேக் வெட்டி மகிழ்ந்தார். வீடு வீடாக சென்று பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும்,என்பதை வலியுறுத்தும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து திருவள்ளூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை கண்டறியும் ஸ்கேன் மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Exit mobile version