சர்க்கரை வள்ளிக் கிழங்குகளின் விளைச்சல் அதிகரிப்பு

கிருஷ்ணகியில் பொங்கல் பண்டிகையையொட்டி சர்க்கரை வள்ளிக் கிழங்குகளின் விளைச்சல் அதிகரித்ததையொட்டி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் பொங்கலை முன்னிட்டு பயிர் செய்துள்ள சர்க்கரை வள்ளிக் கிழங்குகளை விவசாயிகள் அதிகளவு பயிர் செய்துள்ளனர்.

குறுகிய கால பயிரான சர்க்கரை வள்ளி கிழங்கு, 3 மாதங்களில் ஏக்கருக்கு 130 முதல் 140 மூட்டைகள் வரை அறுவடை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இப்பகுதிகளில் விளையும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பெங்களுரு, மதுரை, சென்னை, சேலம், கோவை போன்ற பகுதிகளுக்கும் நல்ல விலையில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அமோகமான விளைச்சல் காரணமாகவும், பொங்கல் திருநாளை முன்னிடும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு கிலோ 20 ரூபாய் வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version