பிளாஸ்டிக் தடையால் வாழையிலை பயன்பாடு அதிகரிப்பு

பிளாஸ்டிக் பொருட்கள் தடையால், வாழையிலைகள் மீது மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியது மகிழ்ச்சியளிப்பதாக வியாபாரிகள் தெரித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட வாழை விவசாயிகளின் வாழ்வாதாரம், பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை மூலம் கணிசமாக மேம்பட்டிருக்கிறது. வாழையிலை பயன்பாடு அதிகரித்திருப்பதால் வியாபாரிகளும் லாபம் அடைந்து வருகின்றனர்.

நூறு கட்டுகளில் பாதி மட்டுமே விற்பனையாகி வந்த நிலையில், பிளாஸ்டிக் தடைக்கு பிறகு விற்பனை விறுவிறுப்பு அடைந்திருப்பதாக தெரிவித்தனர். மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருவது, ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளனர்.

Exit mobile version