ஆம்போடெரிசின் -பி மருந்தை தமிழ்நாட்டிற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்ய பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும்

கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்த உதவும் ஆம்போடெரிசின் -பி மருந்தை தமிழ்நாட்டிற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்ய பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகள், ரெம்டெசிவிர் மருந்து மற்றும் ஆக்சிஜன் ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கியதற்கு, உளமார்ந்த நன்றி என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வருவதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதாக பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்தும் ஆம்போடேரிசின் -பி மருந்துக்கு தமிழ்நாட்டில் தட்டுப்பாடு நிலவுவதாகவும்,

கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் காக்க, போதுமான அளவில் ஆம்போடெரிசின்-பி மருந்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்

Exit mobile version