தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8 புள்ளி 65 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை இறுதி செய்யும் அமைப்பான சி.பி.டி-யின் 224வது கூட்டம் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் ஹெங்வார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8 புள்ளி 55 சதவீதத்தில் இருந்து 8 புள்ளி 65 சதவீதமாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டது.
நிதி அமைச்சகம் அனுமதி அளித்தவுடன் இந்த உயர்வு அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. ஆறு கோடி உறுப்பினர்களைக் கொண்டுள்ள வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 11 லட்சம் கோடி ரூபாய் வைப்புத் தொகையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.