தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 0.10 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 புள்ளி 55 சதவிகிதத்திலிருந்து 8 புள்ளி 65 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார். வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால் 6 கோடி தொழிலாளர்கள் பயடைவர்கள் என்று கூறிய மத்திய அமைச்சர், 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.