சேலத்தில் பெய்த தொடர் மழையால் சரபங்கா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகப் பெய்த கனமழையால் சேர்வராயன் மலைப் பகுதியில் தோன்றும் மேற்கு சரபங்காவில் நீர் வரத்து அதிகமானது. கடந்த 3 ஆண்டுகளாக சரபங்காவில் தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்ததால் ஆங்காங்கே மரம், செடி, கொடிகள் ஆற்றின் குறுக்கே இருந்தது. அவற்றை அகற்றும்படி வனத்துறையினருக்கும், பொதுப்பணித்துறையினருக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.