நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 8 ஆயிரத்து 143 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 7 ஆயிரத்து 510 கன அடியிலிருந்து 8 ஆயிரத்து 143 கன அடியாக அதிகரித்துள்ளது. அதன்படி, அணையின் நீர்மட்டம் 120 கன அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு 7 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து மேட்டூர் அனையின் நீர்மட்டம் 100 நாட்களாக 100 அடிக்கு மேல் நீடிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதேபோல், ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 8 ஆயிரத்து 200 கன அடியிலிருந்து 6 ஆயிரத்து 700 கன அடியாக குறைந்துள்ளது. நீர் வரத்து குறைந்து காணப்பட்டும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 105வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version