மூன்று மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு கோவை குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த சாடிவயல் பகுதியில் உள்ள கோவை குற்றால அருவியில், போதிய மழைப்பொழிவு இல்லாததால் காரணத்தால் நீர்வரத்து குறைந்தது. இதனையடுத்து மிக குறைந்த அளவு நீர் வந்து கொண்டிருந்ததாலும், வனவிலங்குகள் நீர் தேடி, அருவி பகுதிக்கு வரும் என்பதாலும், கடந்த மார்ச் 26 ஆம் தேதி, சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், கோவை குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கோவை குற்றால அருவியில் பல்வேறு பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என, கோவை மாவட்ட வனஅலுவலர் தெரிவித்துள்ளார்.