மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பு

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் எதிர்ப்பார்த்த அளவு மழை பெய்துள்ளதால், தக்காளி விளைச்சல் அமோகமாக உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்பலஞ்சி, கரடிகல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது. அதே சமயம், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவை விட அதிக அளவு பெய்துள்ளது. இதனால், நீர்நிலைகள் நிரம்பியதோடு, நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது. இந்நிலையில், தக்காளி மகசூல் அமோகமாக வந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். நல்ல விலையும் கிடைப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

Exit mobile version