திருவண்ணாமலையில் ஜாதி மல்லிப்பூ விளைச்சல் அதிகரிப்பு

தற்போது பெய்து வரும் மழையால் ஜாதி மல்லி விளைச்சல் சிறப்பாக உள்ளதாலும், நல்ல லாபம் கிடைப்பதாலும், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம்புதூர் கிராமத்தில் அதிக அளவு ஜாதி மல்லி பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக வறட்சியால் பூச்செடிகள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பெய்த மழையால் செடிகள் துளிர்ந்து, பூ வரத்து அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சிகள் அடைந்துள்ளனர். திருமண நாட்களை ஒட்டி, ஒரு கிலோ ஜாதி மல்லி 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை ஆவதால், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்து வருகிறது.

Exit mobile version