கொடைக்கானலில் அத்திப்பழங்களின் விளைச்சல் அதிகரிப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மருத்துவ குணம் கொண்ட அத்திபழங்களின் விளைச்சல் ஆரம்பமாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கீழ் மலைப்பகுதியான பேத்துப்பாறை, அஞ்சு வீடு ஆகிய பகுதிகளில் அதிக மருத்துவ குணம் கொண்ட மலை அத்திப்பழங்களின் விளைச்சல் ஆரம்பமாகியுள்ளது. மலைபகுதியில் விளையக்கூடிய இந்த அத்திபழம் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை அத்திப்பழங்கள் 1 கிலோ  70 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அழிந்து வரும் இந்த மருத்துவகுணம் வாய்ந்த அத்திமரங்களை பாதுகாத்து அதிகளிவில் விவசாயிகளுக்கு நாற்றுக்கள் கொடுக்க வேண்டும் என மலைவாழ் விவசாயிகள் தோட்டக்கலைதுறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version