திருவண்ணாமலையில் வெண்டைக்காய் அதிகளவில் பயிரிட்டுள்ளதாகவும், அதன் மூலம் நல்ல லாபம் கிடைப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்துள்ள எரும்பூண்டி கிராமத்தில், பெரும்பாலான விவசயிகள் வெண்டைக்காய் பயிரிட்டுள்ளனர். விவசாயிகள் தங்கள் நிலங்களில் தொடர்ந்து 7 வருடங்களாக வெண்டைக்காய் பயிரிட்டு வருகின்றனர். வெண்டை பயிரிட 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்படுவதாகவும், நல்ல மகசூலுடன் பெரும் லாபம் கிடைப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தற்போது, ஒரு கிலோ வெண்டைக்காய் 20 ரூபாய் முதல் 30 ரூபாய்க்கு விற்பனையாவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.