திருவண்ணாமலையில் சொட்டுநீரை பாசனத்தின் மூலம் பீர்க்கங்காய் விளைச்சல் அதிகரிப்பு

திருவண்ணாமலையில் சொட்டுநீரை பயன்படுத்தி பீர்க்கங்காய் பயிரிட்டால் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த பொய்யானந்தல் கிராமத்தில் பெரும்பாலானோர் காய்களை பயிரிட்டு வருகின்றனர். அதன்படி குறைந்த நீர் கொண்டு சொட்டு நீர் பாசனம் மூலம் பீர்க்கங்காய் பயிரிடுவதால் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

மூன்று மாத பயிரான பீர்க்கங்காய், அறுவடை செய்யப்பட்ட பிறகு அவலூர்பேட்டை தனியார் காய் மண்டிக்கு அனுப்பப்படுகிறது. ஒரு கிலோ 15 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனையாவதாகவும் ஒரு லட்சம் வரை லாபம் கிடைப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

Exit mobile version