மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் மஞ்சள் கொத்துக்களை அதிகளவில் அறுவடை செய்துள்ளனர்.
ஆண்டுதோறும், பொங்கல் பண்டிகையின்போது, மஞ்சள் கொத்துக்களை பானையை சுற்றி வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் விளைச்சல் முழுமையடைந்ததால், விவசாயிகள் அதிகளவில் அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி மஞ்சள் கொத்து ஒன்று 20 ரூபாய் முதல் விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.