வடகிழக்கு பருவமழை காரணமாக, முதுகுளத்தூர் பேரூராட்சியிலுள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது…
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்து 8 ஆண்டுகளுக்கு மேலாக பருவ மழை பொய்த்துப் போனதால், பேரூராட்சியிலுள்ள அனைத்து நீர் நிலைகளும் வறண்டு காணப்பட்டன. இந்நிலையில், வடகிழக்கு பருவமழைக் காரணமாகவும், தமிழக அரசின் குடிமராமத்து பணிகள் மூலம், நீர் வரத்துப் பகுதிகள் தூர் வாரப்பட்டிருந்ததாலும், பேரூராட்சியின் அனைத்து நீர் நிலைகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. முக்கிய நீர்த்தேக்கங்களிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர் நிலைகளில் மீன்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதில் சிறிய கெண்டை, கெளுத்தி, அயிரை மீன்கள் சிக்குவதாக அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்தனர். நாளொனறுக்கு 20 முதல் 30 கிலோ வரை மீன்கள் பிடிப்பதால், தங்கள் தேவைக்கு போக மீதி உள்ளவற்றை, விற்பனை செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.