சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

தொடர் விடுமுறையால் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அதிக வியாபாரம் நடைபெறுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவிக்கு தொடர் விடுமுறையை அடுத்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால், அருவியில் குளிக்க கூட்டம் அலை மோதியது. கடந்த சில நாட்களாகவே தொடர் மழையால் சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் அருவி பகுதிக்கு குளிக்க செல்ல வாகனம் அனுமதி இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் இயற்கை சூழ்ந்த அழகை ரசித்தபடி நடந்து சென்றனர். மேலும் குழந்தைகள் வயதான பெரியவர்கள் அருவிக்கு சென்று வர வனத்துறை சார்பில் வாகனம் இயக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் உள்ளதால் வியாபாரம் அதிகரித்துள்ளதாக சாலை ஓரக் கடை வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Exit mobile version