வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
திண்டுக்கல்லில் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வார விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுகிறது. அங்குள்ள பில்லர் ராக், பசுமை பள்ளதாக்கு, மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், லிரில் அருவி, வெள்ளி நீர் வீழ்ச்சி, நட்சத்திர ஏரி மற்றும் பிரையண்ட் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. விடுமுறை நாள் என்பதால், இங்கு நிலவி வரும் குளுமையான சூழ்நிலையை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.