தனிநபர் விபரங்களை சேகரித்து வங்கிகளில் கடன் பெறும் கும்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சமூகவலை தளங்களில் தனிநபர் விபரங்களை சேகரித்து வங்கிகளில் கடன் பெறும் கும்பல்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. ச

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் தொடங்கி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வங்கி, ஐ,டி நிறுவன ஊழியர்கள் என அனைவரும் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். சமூகவலைதளங்களில் உள்ள மோகத்தின் காரணமாகவும், அதிக லைக்குகள் பெற வேண்டும் என்பதற்காகவும் விதவிதமாக புகைப்படங்கள் பதிவேற்றப்படுகின்றன. மேலும் தனிநபர்கள்  தங்களது பிறந்தநாள் மற்றும் குடும்பத்தினரின் பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கியமான நாட்களை பதிவிடும் செயலும் அதிகரித்து வருகிறது.

தனிநபர்களின் இத்தகைய சுயவிவரங்கள் ஹேக் செய்யப்பட்டு மோசடி செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இறந்தவர்களின் பெயரில் உள்ள ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இணையதள வலைபக்கங்களில் அவர்களின் பெயர் மற்றும் விபரங்களை சேகரிக்கும் ஹேக்கர்கள் வங்கி கணக்குகளை தெரிந்து கொண்டு அவர்களது பெயரில் உள்ள பணத்தை பரிமற்றம் செய்துகொள்வது மற்றும் சிபில் ஸ்கோர் மதிப்பிற்கேற்ப ஆன்லைனில் கடன் தரும் வங்கிகளில் கடன் பெறுவது உள்ளிட்ட குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.
 
இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் தங்கள் தனிநபர் விபரங்களை தங்களது பக்கங்களில் பிறர் அறியும் வகையில் தெரியாமல் மறைக்க வேண்டும் எனவும் செல்பேசி எண்களை பதிவிடுதை அறவே நிறுத்த வேண்டும் எனவும் இணையதள நிபுணர்கள் கூறுகின்றனர்.

நாளுக்கு நாள் சந்தைக்கு வரும் புதுப்புது சமூக வலைதளப் பக்கங்களை இளைஞர்கள் ஆர்வத்துடன் பணியாற்றி வருகின்றனர். இதுபோன்ற சமூகவலைதளங்களில் தங்களுடைய சுய விவரங்களை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையில் பயன்படுத்தினால் இதுபோன்ற குற்றச் சம்பவங்களிலிருந்து தப்பிக்கலாம் என்பது இணையதள குற்றவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

Exit mobile version