பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பொள்ளாச்சியில் நாட்டு வெல்லத்தின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக புதுப்பானை, கரும்பு, வெல்லம் ஆகிய பொருள்களின் விற்பனை சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சின்னனேரிபாளையம் கிராமத்தில் கரும்பு மூலம் நாட்டுச் சர்க்கரை தயாரிக்கப்பட்டு வருகிறது. எந்த ஒரு ரசாயனமும் கலக்காமல் மக்கள் கண்முன்னே தயாரித்து வருவதால், மக்கள் ஆர்வமுடன் வந்து வாங்கிச்செல்கின்றனர். அதேபோல், அச்சுவெல்லம் மற்றும் உருண்டை வெல்லம் ஆகியவற்றையும் வாங்கி செல்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாளொன்றுக்கு 2 டன் கரும்பு மூலம் 800 கிலோ நாட்டுச்சக்கரையுடன், 200 கிலோ வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை அதிகரித்து வருவதாகவும் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.