மீன்களின் வரத்து குறைவால் உயர் ரக மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கக் கடலில் ஏப்ரல் மாதம் 15 ம் தேதி முதல் ஜூன் மாதம் 15 ம் தேதி வரை மீன் பிடி தடைகாலம் அமலில் இருந்ததால் மீன்களின் வரத்து குறைவாக இருந்தது. இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும், மீன்களின் வரத்து குறைவாகவே இருந்து வருகிறது. இதனால் உயர் ரக மீன்களாக கருதப்படும் வஞ்சிரம், சுறா, வவ்வால் சுறா போன்ற மீன்களின் விலை சற்று அதிகரித்துள்ளதாக மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.