கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டுக் கோயம்பேடு காய்கறி சந்தையில் பொதுமக்கள் பழங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையானது இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து,கோயம்பேடு காய்கறிச் சந்தையில் பழங்கள் வாங்கப் பொதுமக்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். தங்களது வீடுகளில் படைப்பதற்காக விளாம்பழம், பேரிக்காய், நாவற்பழம், வாழைப்பழம் ஆகியவற்றைப் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்வதால், பழங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. விளாம்பழம் கிலோ 70 ரூபாய்க்கும், பேரிக்காய் 50 ரூபாய்க்கும், நாவற்பழம் 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.