தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பம் அதிகரிக்கும்

தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்,நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version