வரலாறு காணாத அளவு அதிகரித்த தங்கத்தின் விலை

வரலாறு காணாத அளவிற்கு தங்கம் விலை சவரனுக்கு 25 ஆயிரத்தை தாண்டியது.

ஒருவார காலமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 3 ஆயிரத்து 121 ரூபாயாகவும், ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 24 ஆயிரத்து 968 என்று இருந்தது. இந்நிலையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 3 ஆயிரத்து 129 ரூபாயாகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை 25 ஆயிரத்து 32 ஆக உள்ளது. வரலாறு காணாத அளவிற்கு தங்கத்தின் விலை 25 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே விலை உயர்வுக்கு முக்கிய காரணம் உள்ளது என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version