வருமான வரி உச்சவரம்பை ரூ.8 லட்சம் என உயர்த்தி இருக்க வேண்டும்

வருமான வரி உச்சவரம்பை 8 லட்ச ரூபாயாக உயர்த்தி இருக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வருடத்துக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு பதிலாக 12 ஆயிரம் ரூபாய் அறிவித்திருக்க வேண்டும் எனவும் மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். கரூர் அருகே சணப்பிரட்டி பகுதியில் சமுதாய கூடத்துக்கான பூமி பூஜை விழாவில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் நீண்ட நாள்களுக்கு பிறகு பட்ஜெட்டில் விவசாயிகள் குறித்து சிந்திருப்பது வரவேற்கத்தக்கது என்றார். 

Exit mobile version