பிரபல வணிக நிறுவனங்களில் வருமான வரிச் சோதனை

சென்னை மற்றும் கோவையில் 74 இடங்களில் பிரபல வணிக நிறுவனங்களில் வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை மற்றும் கோவையில் பெரம்பூரில் ரேவதி குழுமத்திற்கு சொந்தமான நகை கடை, சூப்பர் மார்கெட், துணிக் கடை, பர்னிச்சர் மற்றும் உரிமையாளரின் வீடு, அலுவலகம் மற்றும் சரவணாஸ் ஸ்டோர் குழுமம், லோட்டஸ் குழுமம் உள்ளிட்ட 74 இடங்களில் வருமான வரிச் சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிறுவனங்களில் வரி எய்ப்பு செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை காரணமாக அந்த நிறுவன கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Exit mobile version