நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன்

பிகில் படம் தொடர்பாக நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பிய நிலையில், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

நடிகர் விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இதில், வருமான வரி ஏய்ப்பு நடந்ததாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவத்திற்கு சொந்தமான 20 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தினர். இந்நிலையில், நடிகர் விஜய்க்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், அங்கு வந்த அதிகாரிகள் விஜயை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவரது சம்பளம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மாஸ்டர் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

Exit mobile version