மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதில் எந்த ஆட்சேபம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில், வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த் அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.இதையடுத்து நிலத்தை கையகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.