கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை: ரூ.800 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

தமிழகம் மற்றும் ஆந்திராவில் கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 800 கோடி ரூபாய் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் ஆந்திராவிலுள்ள கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 4 நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். வருமான வரித்துறையினர் சோதனை நிறைவடைந்ததையடுத்து, 800 கோடி ரூபாய் வரை வருமான வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 44 கோடி ரூபாய் பணம், 90 கிலோ தங்கம், 20 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி வெளிநாடுகளில் கல்கி ஆசிரமம் 100 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், சோதனையின் போது 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், பினாமி சொத்துக்கள், வெளிநாட்டு முதலீடு, ஹவாலா பணபரிமாற்றம் போன்றவைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் வருமானத் வரித்துறை தெரிவித்தனர். இந்த நிலையில் கல்கி பகவானின் மனைவி மற்றும் மகன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version