திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வரிமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத 24 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் குழுமத்தில் வரி ஏய்ப்பு புகார் காரணமாக வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அன்புச் செழியனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலங்கள் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலை முதல் நடந்த சோதனையில், கணக்கில் வராத 24 கோடி ரூபாய் பணம் கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.